இங்கிலாந்தில் வைத்து ஸ்கொட்லார்ந்து யார்ட் பொலிசாரால் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் 6லட்சத்து 50 ஆயிரம் பவுண்ட் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கை எதிர்வரும் மே 17ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு, அன்றைய தினம் விஜய் மல்லையாவை நீதிமன்றில் முன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பல்வேறு வங்கிகளிடம் பெற்ற 9,000 கோடி ரூபா கடன் தொகையை மீளச் செலுத்தவுள்ள நிலையில், அவர் நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் தங்கியிருந்த விஜய் மல்லாவை நாடு கடத்துமாறு இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது
Apr 18, 2017 @ 10:49
தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் மல்லையாவை ஸ்கொட்லார்ந்து யார்ட் போலீஸ் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகஙகள் தெரிவித்துள்ளன. பல்வேறு வங்கிகளிடம் பெற்ற 9,000 கோடி ரூபா கடன் தொகையை மீளச் செலுத்தவுள்ள நிலையில், அவர் நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் தங்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்மீது , வெளிவர முடியாத கைது ஆணையை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. அவரை நாடு கடத்த இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்க்பபட்டுள்ளது