நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலையை அடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் விரைவில் பூர்த்தியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 60 வீதமான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும், ஏனைய மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் பூர்த்தியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.