குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி
எங்களுடைய சமூகத்தில் கிராமத்தைச் சேர்ந்த முதியோர்களை விட நகரத்தைச் சேர்ந்த முதியோர்களே அதிகம் முதியோர் இல்லங்களில் காணப்படுகின்றனர் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சி. சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
இன்று 08-10-2016 கிளிநொச்சி செல்வாநகா கிராமத்தில் இடம்பெற்ற முதியோர் சிறுவர் தின கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்த மாவட்டத்தில் இதுவரை காலமும் முதியோர்களை கௌரவிக்கும் பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவை அனைத்தும் அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களினால் நடத்தப்பட்டதாகவே இருந்துள்ளது. ஆனால் இன்று முதன்மை முதலாக ஊர் பொது மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் கிராமத்தில் உள்ள முதியோர்களை கௌரவிக்கும் நிகழ்வை நடத்தியிருக்கின்றனர் இது மகிழ்ச்சியளிக்கிறது. எனத் தெரிவித்த அவர்
முதியோர்கள் எம் சமூகத்தின் பொக்கிசங்கள் அவர்களுக்குரிய கௌரவம் கொடுக்கப்பட்டு பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
செல்வாநகர் கிராமத்தில் செயற்படுகின்ற மூத்த பிரஜைகள் சங்கம் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து கிராமத்தில் உள்ள மூதியோர்கள் மற்றும் சிறுவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தார்கள்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினா பசுபதிபிள்ளை மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.