திருகோணமலை துறைமுகத்தினது அபிவிருத்தி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப்பயணத்தின் போது இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை புனரமைத்தல், கைத்தொழில் வலயங்களை உருவாக்குதல், மின் உற்பத்தித்திட்டங்களை ஏற்படுத்தல் நெடுஞ்சாலைகளை அமைத்தல் போன்ற விடயங்களை இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பிரதமரின் இந்த இந்திய பயணத்தின் போது இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேச வெசக் தினத்தினது அழைப்பிதழை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரதமர் நேரடியாகக் கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.