ஹெய்ட்டியில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட இராணுவ தளபதி உள்ளிட்டோா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2008ம் ஆண்டில் ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைப் படையினர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை அமைதி காக்கும் படையணியின் ஆறாம் படையணியில் பணியாற்றியவர்களில் சிலர் இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஒருவரும், நான்கு படைவீரர்களும் இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதனைத் தொடர்ந்து ஹெய்ட்டியில் கடமையில் ஈடுபட்டிருந்த ஒட்டுமொத்த படையினரும் மீள அழைக்கப்பட்டுள்ளனர். ஹெய்ட்டி பெண்களின் விருப்பத்துடன் பாலுறவு கொண்ட இராணுவப் படையினர் சிலரே இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.