இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற வீதி விபத்துகளில் சராசரியாக நாள்தோறும் 410 பேர் உயிரிழந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அளவில்வீதி விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியா முக்கிய இடம் வகிக்கின்றது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற வீதி விபத்துகளில் சராசரியாக நாள்தோறும் 410 பேர் உயிரிழந்துள்ளனர் என தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் கடந்த ஆண்டில் மட்டும் வீதி விபத்துகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் எனவும் அதேபோல், 2015-ம் ஆண்டு ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் வீதிவிபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது