Home உலகம்துருக்கியிலிருந்து கிரேக்கம் நோக்கிப் பயணித்த படகு கவிழ்ந்து 16 ஏதிலிகள் மரணம்

துருக்கியிலிருந்து கிரேக்கம் நோக்கிப் பயணித்த படகு கவிழ்ந்து 16 ஏதிலிகள் மரணம்

by admin


துருக்கியிலிருந்து கிரேக்கம் நோக்கிப் பயணித்த படகு கவிழ்ந்ததில் 16 ஏதிலிகள் கொல்லப்பட்டுள்ளனர். கிரேக்க தீவான லெஸ்போஸில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துருக்கியையும் கிரேக்கத்தையும் பிரிக்கும் குறுகலான நீரினை ஒன்றில் இந்த படகு கவிழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருபது முதல் இருபத்து ஐந்து ஏதிலிகள் இந்தப் படகில் பயணித்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் படகில் பயணிக்கும் எதிலிகள் உயிரிழப்புச் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது. துருக்கியிலிருந்து கிரேக்கம் நோக்கிப் பயணிக்கும் ஏதிலிப் படகுகள் கவிழ்ந்து நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More