போராட்டங்களை எதிர்நோக்குவதற்கு விசேட படையணி உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா இந்த படையணியை வழிநடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தப் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை எதிர்நோக்குவதற்கு முப்படையினரை உள்ளடக்கி இந்த விசேட படையணி உருவாக்கப்பட உள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறு குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களினால் நாடு ஸ்தம்பிதமடைய இடமளிக்கப்பட முடியாது எனவும், விசேட படையணி ஒன்றை உருவாக்கி இதனை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் அமைச்சரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விசேட படையணி குறித்த யோசனைத் திட்டத்திற்கு தலைமை தாங்க சரத் பொன்சேகா இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.