பளைப்பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட சந்தேக நபரை தொடர்ந்தும் சிறையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்க மன்று அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் ஐந்தாம் மாதம் ஐந்தாம் திகதிவரை விளக்கமறியலையும் நீடித்துள்ளது
கடந்த எட்டாம் திகதி பளைப்பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் பளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் நீமிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து பதிவாளர் ,பொலிசார் ,சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் கொண்ட குழுவினர் மன்றின் பணிப்பின் பெயரில் பளைப்பகுதியில் உள்ள குறித்த வீட்டினை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் சில சான்றுப் பொருட்களையும் மீட்டிருந்தனர்
அத்துடன் கடந்த இருபத்தோராம் திகதி குறித்த வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த சம்பவத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிப்பதற்கு பொலிசாரால் கோரிக்கை விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து தொடர்ந்து கடந்த இருபத்திநான்காம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த வழக்கை கையில் எடுத்தனர்
இந்தநிலையில் இன்று (2017.04.26) குறித்த வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் எடுக்கப்பட்டபோதே சந்தேக நபரை தொடர்ந்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு மன்று அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் ஐந்தாம் மாதம் ஐந்தாம் திகதிவரையும் விளக்கமறியரல நீடித்துள்ளது.
அத்துடன் பளைப்பகுதில் அவரது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கருவிகள் இன்று பொலிசாரால் மன்றில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது