எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்( James Dauris ) க்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம், இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பிரித்தானிய தூதரக பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.