ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு வர உள்ளார். உண்மை மற்றும் நீதியை மேம்படுத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி Pablo de Greiff எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு வர உள்ளார்.
பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக இலங்கைக்கு வரவுள்ள அவர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி முதல் 23ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. கால மாறு நீதிப் பொறிமுறைமை எவ்வாறு இலங்கையில் அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்து இந்த பயணத்தின்; போது விசேட பிரதிநிதி கவனம் செலுத்த உள்ளார். பக்கச்சார்பற்ற சுயாதீன மதிப்பீடு செய்யும் நோக்கில் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.