யுத்த வெற்றியானது சமாதானத்தை ஒருபோதும் நிலைநாட்டாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள தமிழ் சிறுவர் சிறுமியருக்கு இடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்ப வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் யுத்தம் வென்றெடுக்கப்பட்ட போதிலும் சமாதானம் நிலைநாட்டப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதன் மூலமே நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்த அவர் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் நூற்றுக் காணக்கான பாடசாலை மாணவ மாணவியர் ஒரு வார்த்தை கூட தமிழ் சிறுவர்களுடன் பேசியதில்லை எனவும் அதேபோன்று வடக்கு கிழக்கிலும் பாடசாலை மாணவர்கள் சிங்கள மாணவர்களுடன் பேசாத நிலைமை நீடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து மத நிகழ்வுகளையும் பாடசாலைகளில் கொண்டாடுதவற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள அவர் யுத்தத்தை காரணம் காட்டிய கடந்த மஹிந்த அரசாங்கம் யுத்த நிறைவின் பின்னரும் எதனையும் சாதிக்கவில்லை எனவும் மஹிந்த அரசாங்கத்தின் களவுகளில் தற்போதைய அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.