அளுத்கமை கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்பிப்பதோடு நின்று விடாமல் அதனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதுடன் அக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடமும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடமும் வேண்டுகோள் விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ஊடக அறிக்கை ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஒன்று நெருங்கியுள்ள சூழ் நிலையில் அளுத்கமை கலவரம் தொடர்பிலான கருத்தாடலொன்று சென்று கொண்டிருப்பதை அறிய முடிகிறது எனவும் அதனை தாம் வரவேற்பதாகவும் .அப்போது தான் முஸ்லிம்கள் அதிர்ச்சிகரமான பல உண்மைகளை அறிந்து கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அளுத்கமை கலவரத்தின் போதான இழப்பீடுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக,அமைச்சரவை பத்திரமொன்றை சமர்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அதற்கு ஏற்ப அது தயார் செய்யப்படுகின்ற விடயமும் இ அறிய கிடைத்ததாகவும் இக் கலவரம் தமது ஆட்சி காலத்தில் இடம்பெற்றதால் இழப்பீடுகள் வழங்கப்பட்டால் தமக்கும் மிக்க மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தமது ஆட்சிக் காலத்தில் குறித்த கலவரத்தின் போது சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் மிக குறுகிய காலத்தினுள் புணரமைப்பு செய்து கொடுக்கப்பட்டதாகவும் இழப்பீடுகள் குறித்து உடனும் மதிப்பீடு செய்யப்பட்ட போதும் போதும் அவ் வருடமே தமது ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் அவற்றை வழங்க முடியாமல் போனது எஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.