தமிழகத்துக்கு புதிய ஆளுனர் ஒருவர் எதிர்வரும் மே மாதம் 12ம்திகதி அறிவிக்கப்படலாம் என இந்தியசெய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியபிரதமர் நரேந்திர மோடி வருகிற மே மாதம் 12ம்திகதி இலங்கை செல்லவுள்ளநிலையில் அதற்கு முன்னதாக ஆளுனரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுனராக இருந்த ரோசையாவின் பதவி காலம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையில் மராட்டிய ஆளுனராக பணியாற்றும் வித்யாசாகர்ராவ் தமிழகத்துக்கும் பொறுப்பு கவர்னராக இருந்து வருகிறார். தமிழகத்துக்கு தனி ஆளுனர் நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தமிழகத்தோடு மத்திய பிரதேசம், மேகாலாயா, அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய ஆளுனர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது