பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கொரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது. ஒருநாள் ஹர்த்தால் ஒன்றை நடத்தி பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை எதிகொள்வதற்கும் மஹிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.
காலி முகத் திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்திற்கு பெரும் திரளான மக்கள் பங்கேற்றிருந்ததன் காரணமாக, கூட்டு எதிர்க்கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளது என கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஸ மிகவும் மகிழ்ச்சியாக இருந்த தருணம், காலி முகத் திடலில் மக்கள் குழுமியிருந்ததனை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டல் மாடியிலிருந்து பார்த்த போதாகும் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரி நாடு முழுவதிலும் ஒருநாள் ஹர்த்தால் போராட்டமொன்றை நடாத்த கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது.