Home இலங்கைகளுத்துறை சிறைச்சாலை பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் குறித்த பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்:-

களுத்துறை சிறைச்சாலை பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் குறித்த பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்:-

by admin

களுத்துறை சிறைச்சாலை பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் டி.எம்.
சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய மூவர் அடங்கிய குழுவினரால் நேற்றையதினம் கையளிக்கப்பட்ட அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர், கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, மிகவும் குறுகிய காலத்துக்குள் அறிக்கையைச் சமர்ப்பித்த குழுவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் சிறைச்சாலைகளுக்கு அலைபேசிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
எனவும் எனினும், இந்த விவகாரம் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில், விளங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆத்துடன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை, அமைச்சின் செயலாளர் ஊடாக விரைவில் நடைமுறைப்படுத்துவோமெனவும் அவர் தெரிவித்துள்ளர்h. குறித்த அறிக்கை அக்குழுவின் தலைவரான முன்னாள் நீதிபதி ரூமி மன்சூரினால் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More