இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு, 12ஆம் திகதி கூட்டமைப்பை சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இச் சந்திப்பின் போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மோடியிடம் எடுத்துரைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசவுள்ளதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும் மோடி இலங்கைப்பயணத்தின் போது யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்துக்கும் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.