எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தினால் நடுக்கடலில் எல்லைப் பலகை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதால், அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே செல்கின்ற நிலையில் அதனைத் தடுக்கும் வகையில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், நடுக்கடலில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்கும் வகையில் எல்லைப் பலகையை இலங்கை அரசாங்கம் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து 5வது மணல்திட்டில் இலங்கை கொடியுடன் குறித்த பலகை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தனுஷ்கோடியில் இருந்து 5வது மணல்திட்டில் இந்திய அரசாங்கம் எல்லைப் பலகை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.