ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டதற்கு இணங்க கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று துணைத் தலைவர்களை நியமித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது எனவும் எனினும் இந்த திட்டத்தை அமுல்படுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே தினக் கூட்டம் நடைபெறும் வரையில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை ஒத்தி வைக்குமாறு தாமே கோரியதாகத் தெரிவித்துள்ள அவர் மே தினக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.