186
அழைப்பு
—————————— —-
வேலணையூர்-தாஸ்
வாருங்கள்
எங்கள் வெசாக் பந்தல்களில்
இளைப்பாறுங்கள்.
என்ன செய்வது மே மாதம் உங்களுக்கு
துயர நினைவுகளைத் தருகின்றது அறிவோம்
இந்த கொடுங்கனவுகளை மறக்க
எங்கள் ஜாதக கதைகளைக் கேளுங்கள்
உங்கள் குழந்தைகளை எண்ணி அழவேண்டாம்
புத்தரின் போதனையைக் கேளுங்கள்
இறப்பில்லா வீட்டில் எள் பெற முடிகிறதா உங்களால்
நீங்கள் இதையெல்லாம் மறந்து விட வேண்டும்
அதற்க்காகத்தான் பைலா பாடுகின்றோம்
ம்ம் சேர்ந்து ஆடுகின்றோம்
ஏன் முகம் சுளிக்கிறீர்கள்
மொழி புரியவில்லையா காலம் செல்ல செல்ல
இது உமது மொழியாகிவிடும்.
ஏன் இன்னும் கோபம்
கோபம் கூடாதென்றார் புத்தர்
நாங்கள் உங்கள் உறவுகளைக் கொன்றோம்
தந்தையரைக் காணாமல் செய்தோம்
ஏன் எல்லாம் சாமாதானத்திற்காகத் தான்
நாங்களும் உங்களிடம் வரவேண்டும்
என்பதற்காகத் தான்
ம் ம் அந்த ரத்தக் காட்சிகளை மறந்து விடுங்கள்
வண்ணவிளக்குகளில் சுத்துகின்ற றாட்டினங்களில்
உம் சித்தத்தை தொலையுங்கள்
பாருங்கள்எங்கள் வெள்ளை ஆடைகளை
நாங்கள்எவ்வளவு அன்பானவர்கள்
என்பது தெரியும்
எல்லாம் சரி
வாருங்கள் நாம் கொண்டாடலாம்
முதல் இந்த கதையைக் கேளுங்கள்
சித்தார்தனுக்கு ஒரு மனைவி இருந்தாள்
அவனுக்கொரு மகனும் இருந்தான்
Spread the love