கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக வெசாக் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது. இன்று 10-05-2017 மாலை ஆறு முப்பது மணிக்கு கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கிளிநொச்சி வெசாக் வலயத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து மத வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
வெசாக் நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி படைகளின் தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்
2561 வது வெசாக் நிகழ்வினை முன்னின்டு கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் நடாத்தப்படும் வெசாக் திருவிழா 2017 மே மாதம் 10ம் 11ம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகிறது புனித பாகங்களின் கண்காட்சி’ வெசாக் கூடு கண்காட்சி’ பக்தி பாடல் இசைநிகழ்வு மற்றும் தினமும் அன்னதானம் என்பவற்றால் சிறப்பு பெறும். இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைத்து இலங்கையரையும் கிளிநொச்சி பாதுகாப்பு படை தளபதி உட்பட அதிகாரிகளும் அன்புடன் வரவேற்கின்றனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.