சென்னை நுங்கம்பாக்கம் உள்பட 82 புகையிரத நிலையங்களில் விரைவில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொலை, கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு கண்காணிப்பு கமரா பதிவுகள் சமீப காலங்களாக முக்கிய பங்கு வகித்து வருகின்ற நிலையில் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி. நிறுவனங்கள் உள்பட பெரிய நிறுவனங்கள், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுகின்றன.
சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்த பெண் பொறியியலாளர் சுவாதி கொலை நடவடிக்கையின்போது புகையிரத நிலையத்தில் கண்காணிப்பு கமரா இல்லாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதைத்தொடர்ந்து பயணிகள் அதிகம் கூடும் புகையிரத நிலையங்கள் மற்றும் பதற்றமான புகையிரத நிலையங்களில் நிர்பயா திட்ட நிதியின் கீழ் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படும் என்று புகையிரத நிலைய நிர்வாகம் தெரிவித்தது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையே மனுவாக கருதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது