இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது எதிர்ப்பை வெளியிட அனைவரும் கறுப்பு கொடிகளை பறக்க விடுமாறு ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச கோரியிருந்தார்.
இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் நோக்கில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருவதாகவும் இதனால் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு எதிர்ப்பை வெளியிடுமாறும் கோரியிருந்தார். எனினும், இவ்வாறு கோரியிருந்த விமல் வீரவன்ச குடியிருக்கும் இல்லத்தில் கூட கறுப்பு கொடி ஏற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தின் போது விமல் வீரவன்ச மிகவும் கடுமையான தொனியில் கறுப்பு கொடி போராட்டம் நடத்துமாறு கோரியிருந்தார். திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பிலான உடன்படிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நாட்டுக்கு எதிரானதாக காணப்படுகின்றது என குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் விமல் வீரவன்சவின் இல்லத்திலும் கறுப்பு கொடி ஏற்றப்படவில்லை.