வட மத்திய மாகாணத்தின் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் முதலமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாகாணசபையில் அங்கம் வகிக்கும் 18 உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் இந்த 18 உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் ஆட்சி அதிகாரத்தை கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த 18 கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான வடமத்திய மாகாணசபை உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.