ஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரின் 5ஆவது லீக் போட்டியாக கான்பூரில் நடைபெறவுள்ள போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் சன்றைஸஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் ஹைதராபாத் அணிக்கு இன்றைய போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளது.
அதேபோன்று கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்றைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
புள்ளிகளின் அடிப்படையில் 18 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ள மும்பை அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. அதேபோன்று 16 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி இரண்டாவது இடத்திலுள்ளது. எனவே இவ்விரண்டு அணிகளுக்கும் இந்தப்போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளது.