மியன்மாரில் சில பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தி ஏழு பௌத்த பிக்குகளுக்கு எதிராக மியன்மார் காவல்துறையினர் பிடிவிராந்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
பௌத்த கடும்போக்குவாதிகள் ரொஹினியா முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மியன்மாரில் சுமார் ஒரு மில்லியன் ரொஹினியா முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இரண்டு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மியன்மார் அரசாங்கம் அறிவித்துள்ளது.