வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக நடத்தப்படும் நினைவேந்தல் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இவ்வாறு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தினம் முதல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் அரச விரோத செயற்பாடுகள், பேரணிகள், கூட்டங்களை நாளைய தினம் நடாத்த சில திட்டமிட்ட குழுக்கள் முயற்சித்து வருவதாகக் பாதுகாப்புதரப்பு தெரிவித்துள்ளது.
வடக்கில் செயற்பட்டு வரும் சில அரசியல் தரப்புக்கள் அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிப்பதாகவும் தமிழ் மக்களை பிழையாக வழிநடத்தி இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட சிலர் முயற்சிக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ள காவல்துறை உயர் அதிகாரியொருவர் இவ்வாறான எந்தவொரு அரச விரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.