காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவத்தினர் வீடுவீடாக தேடுதல் மேற்கொள்வதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊருடுவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் தீவிரவாதிகளை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உளவுத்துறையின் ரகசிய தகவலின்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் எனவும் இது அண்ணளவான எண்ணிக்கைதான் என்றாலும் மேலும் அதிகமான தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.