ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சொத்து விபரங்களை வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதியும் பிரதமரும் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவில்லை என ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தகவல்கள் வழங்கப்படாத காரணத்தினால் தகவல் அறிந்து கொள்ளும் ஆணைக்குழுவிடம் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 3ம் திகதி இது தொடர்பிலான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தகவல் அறிந்து கொள்ளும் ஆணைக்குழு உரிய பதிலை அளிக்கத் தவறினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்ய முடியும் என ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.