ஈரானின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் ஹசன் ரூஹானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஈரானில் நேற்றையதினம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதையை ஜனாதிபதியான 68 வயதான ஹசன் ரூஹானி மற்றும் 56 வயதான இப்ராகிம் ராய்சி ஆகியோர் போட்டியிட்டனர்.
சுமார் 4 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும் 70 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாகவும் உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று காலையில் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் பதிவான வாக்குகளில் 58.6 சதவிகிதம் வாக்குகளை பெற்ற ஹசன் ரூஹானி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட இப்ராகிம் ராய்சி 39.8 சதவிகித வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார்.