Home இலங்கைஅமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது?

அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது?

by admin


அமைச்சரவையில் இன்றைய தினம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மிக முக்கியமான ஓர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு வெளிநாடு சென்றுள்ள அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு நிதி அமைச்சுப் பொறுப்பும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறெனினும் அமைச்சரவை மாற்றத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More