ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ள உள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்லின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
மூன்று நாள் பயணமொன்றை மேற்கொண்டு நாளை அவுஸ்திரேலியா புறப்பட்டுச் செல்ல உள்ள ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் எதிர்வரும் 25ம் திகதி கன்பராவில் ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதுடன் எதிர்வரும் 26ம் திகதி சிட்னியில் அவுஸ்திரேலிய வாழ் இலங்கை வர்த்தகப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு அவுஸ்திரேலியா அந்நாட்டு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக 1954ம் ஆண்டு அப்போதைய பிரதமர் சேர் ஜோன் கொதலாவலவிற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.