இலங்கை குடியரசுதினத்தினை நினைவுகூறும் நிகழ்வு இன்றுகாலை(22.05.2017) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்கஅதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.
தேசியக்கொடிஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அரசாங்கஅதிபர் தலமைஉரை ஆற்றும்போது, 1948ஆம்ஆண்டு பெப்ரவரிமாதம்04 ம்திகதியிலிருந்து இலங்கை பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து மீண்டபோதிலும் தொடந்தும் பிரித்தானிய அரசின் கிரீடத்தின் கீழ் டொமினிக் நிலைமையுடைய சுகந்திரமொன்று மட்டும்உரித்தாக இருந்தது.
ஆனால் 1972 ஆம் ஆண்டின் குடியரசுரஅசியல் யாப்புடன ;இலங்கைமக்களுக்குப் பொறுப்புகூறுகின்ற முழுமையான இறைமையுடைய மற்றும் சுகந்திர அரசாக ஆகியது. இக்குடியரசு உருவாவதற்கான சந்தர்ப்பங்கள், இவற்றுக்காக தலைமையேற்ற தலைவர்களின் பங்களிப்புக்கள், இலங்கைகுடியரசு ஆகியமையால் நாட்டுமக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் போன்றவைபற்றி குறிப்பிட்டார்.
அடுத்து உதவிதிட்டப்பணி;ப்பளர் திரு.கேதீஸ்வரன் அவர்களும் குடியரசு தினம்பற்றி உரையாற்றினார். இந்நிகழ்வில்அனைத்து செயலக உத்தியேகத்தர்களும் கலந்துகொண்டனர்.