ஆறு மாத காலத்திற்குள் படையினர் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பிற்காக வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை முழுமையாக அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
600 முதல் 700 ஏக்கர் வரையிலான காணிப் பகுதியில் வடக்கு மாகாணத்திற்கான பாதுகாப்பிற்காக படையினரை நிலைநிறுத்த முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கில் வலிகாமம் பிரதேசத்தில் சுமார் 4000 ஏக்கர் காணியை இலங்கை அரச படையினர் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பலவந்தமான அடிப்படையில் இந்தக் காணிகளை அவர்கள் பயன்படுத்தி வருவதாகவும் சுமார் 600 முதல் 700 ஏக்கர் வரையிலான காணிப் பகுதி படையினருக்கு போதுமானது எனினும் பாரியளவில் காணிகளை படையினர் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.