புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அறிமுகம் செய்யப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் குறித்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக கொழும்புத் தகவலகள் தெரிவிக்கின்றன. நாட்டில் பயங்கரவாதம் கிடையாது என்ற காரணத்தினால், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியமில்லை என கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீவிடுதலைப்புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.