வடமாகாண வேலையற்றோர் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு வடமாகாண சபை தனது கண்டனங்களை தெரிவித்து உள்ளது. வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கண்டனம் தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த 09 ஆம் திகதி வடமாகாண சபைக்கு முன்பாக போராட்டம் நடாத்திய பட்டதாரிகள் மாகாண சபை வாயில் கதவுகளை சங்கிலி , பூட்டு போட்டு பூட்டி இருந்தனர். இதனால் அன்றைய தினம் அவைக்கு வந்த உறுப்பினர்கள் ஊழியர்கள் உள்ளே வரமுடியாது வெளியில் காத்திருந்தனர். இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என மேலும் தெரிவித்தார்.