கிரீசின் முன்னாள் பிரதமர் லூகாஸ் பபாடேமோஸ் ( Lucas Papademos ) சென்ற காரில் குண்டு வெடித்ததில் அவருக்கு காயமேற்பட்டுள்ளது. தலைநகர் ஏதென்ஸில் நேற்றையதினம் லூகாஸ் மற்றும் வங்கி அதிகாரிகள் இருவர் காரில் சென்று கொண்டிருந்த வேளை காரின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது.
இதில் லூகாஸ் மற்றும் அவரது சாரதி ஆகியோருக்கு காயமேற்பட்டுள்ளது எனவும் குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. லூகாஸ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கிரீஸ் நாட்டின் பிரதமராக பதவி வகித்ததுடன் ஐரோப்பிய மத்திய வங்கியின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.