Home இந்தியாபஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் ராணுவதளம் அருகே மர்ம பையால் பரபரப்பு:-

பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் ராணுவதளம் அருகே மர்ம பையால் பரபரப்பு:-

by admin

பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் ராணுவதளம் அருகே கண்டெடுக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பையில் ராணுவ சீருடைகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் தீவிர கண்கானிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இதே போல் மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் அதில் தொலைபேசி; கோபுரங்களுக்கு பொருத்தப்படும் மின்கலம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் இந்நகரில் உள்ள விமானப்படை தளத்திற்குள் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 7 வீரர்களை சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More