துருக்கியின் 43 கிராமங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குர்திஸ் தொழிலாளர் கட்சி அல்லது பீ.கே.கே கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கிராமப் பகுதிகளில் தங்கியுள்ள கிளர்ச்சியாளர்களை கைது செய்யும் நோக்கில் இவ்வாறு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேடுதல் வேட்டையின் மூலம் ஆயுதங்கள், ஆயுதக் களஞ்சியங்கள் உள்ளிட்டனவற்றை கைப்பற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.