மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை கண்டித்து இன்று சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தடை செய்யப்படுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் அதேவேளை தமிழகம், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்துகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலை 9 மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.