151
ஆம். தவராசா சுட்டிப்பாக மன்னிப்பு என்ற வார்த்தையையோ அல்லது ஈ. பி. டி .பி . என்ற வார்த்தையையோ பாவிக்கவில்லை.
அவருடைய உரை குழப்பபட்ட போது குறிப்பாக அவரை பேச விடாது கேள்விகள் கேட்ட ஒருவர்…நீங்கள் செய்த கொலைகளையும் குற்றங்களையும் துரோகங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்…என்று கேட்ட போ து அவர் பின்வருமாறு கூறினார்…. நாங்கள் செய்த எல்லாவற்றையும் மீட்டிக் கொள்வோம் ….நாங்கள் செய்த பிழைகள். அரசியல் ரீதியாக நாங்கள் செய்த தவறுகளை நாங்கள் ஏற்றுக் ….என்று கூறும்போது பார்வையாளர்கள் கைதட்டினார்கள்….அவர் பேசிய போது கைதட்டிய மக்கள் அவர் நாங்கள் என்று கூறியது அவர் சார்ந்த கட்சியை என்று விளங்கியே கை தட்டினார்கள். .அரங்கில் அப்போதிருந்த சூழல் அப்படி ஒரு விளக்கத்துக்கு இட்டுச்செ ல்வதாகவே இருந்தது…….அவர் அந்த அரங்கிற்கு ஒரு கட்சியின் பிரதிநிதியாகவே அழைக்கப் பட்டிருந்தார். .அவரை கேள்விகேட்டவர்கள் அவரது கட்சியை நேரடியாகக் குற்றம் சாட்டி கேள்வி கேட்டிருந்த ஒரு கொந்தளிப்பான பின்னணியில் அவ்வா று தான் அவையிலிருந்தவர்கள் விளங்கிக்கொண்டார்கள்.அதனால் தான் கைதட்டினார்கள். அது அந்தச் சந்தர்பம் அந்தச் சூழல் சார்ந்த ஒரு விளக்கம்…அது தவறு என்று தவராசா கூறுகிறார்….அவர் நாங்கள் என்றது தமிழ் மக்களை என்றும் கூறுகிறார்.அப்படிஎன்றால் சபையினர் எதை விளங்கி கை தட்டினார்கள்?
தவராசா சபையை பார்த்து ஏன் கை தட்டுகிறீர்கள்? என்று கேட்டதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்…….
எதுவாயினும் ஈ.பி.டி.பி.,மன்னிப்பு ஆகிய சுட்டிப்பான வார்த்தைகளை அவர் பயன் படுதியிருக்கவில்லை என்பது சரியே. எனவே எனது கட்டுரையிலிருந்து அந்தப் பகுதியை நீக்குகிறேன். அப்பிழைக்கு பொறுப்பேற்கிறேன்.
அதேசமயம்,முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டஅமைப்புக்களும் அவற்றின் உறுப்பினர்களும் தாங்கள் முன்பு இழைத்திருக்கக்கூடிய தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்பது என்பது ஒரு உன்னதமான ஜனநாயகப் பண்பு என்றே நம்புகிறேன்.தமிழ் அரசியலை அதன் அடுத்த பிரகாசமான கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அது ஒரு இன்றியமையாத முன் நிபந்தனையுமாகும்.
Spread the love
1 comment
why only talk about EPDP? LTTE also killed people. But, no mention about that.