இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 26ம் திகதி கைது செய்யப்பட்ட தினகரன் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று 4வது முறையாக விசாரணைக்கு வந்த நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடர்பு குறித்து இது வரை விசாரணை நடத்தாதது ஏன் என கேள்வி எழுப்பிய டெல்லி நீதிமன்ற நீதிபதி டிடிவி. தினகரன், மல்லிகார்ஜூனா இருவருக்கும் ஜாமீன் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இருவரும் 5 லட்சம் ரூபா ஜாமீனில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ள நீதிமன்றம் வெளியே சென்று சாட்சியங்களை கலைக்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்துள்ளதுடன் இருவரும் தங்களது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் வெளியூர் செல்லக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது