கதிர்காம பஸ்நாயக்க நிலமேயுடனான சந்திப்பில் இந்து மாமன்றத்தின் உப தலைவர் ஆறு திருமுருகன்:-
தமிழர் தாயகப் பகுதிகளில் புத்தர் சிலைகள் புதிதாக வைக்கப்படுவதால், தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌரியங்கள் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பீ.குமாரகேயிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று சென்றிருந்த கதிர்காம பஸ்நாயக்க நிலமேயுடனான சந்திப்பின் போது, இந்து மாமன்றத்தின் உப தலைவர் ஆறு திருமுருகன் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்து மா மன்றத்தில் பௌத்த மதத்திற்கு மதிப்பளிப்பதாக குறிப்பிட்ட ஆறு திருமுருகன், தற்போதைய சூழ்நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில், அவ்விடங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றமை மனவருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டார்
அதேவேளை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மத ரீதியான முரண்பாடுகள் குறித்து; நல்லை ஆதின குருமுதல்வர் கதிர்காம ஆலய நிலமேக்கு எடுத்துரைத்துள்ளார்.
மேலும் தமது யாழ்ப்பாணத்திற்கான பயணம் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் ஊடகவிலாளர்களை சந்தித்த டி.பீ.குமாரகே, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தினால் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.