குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளிக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மற்றும் கடற்படை தளபதிகள் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேரடியாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தியிருப்பதாகவும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அகியனவற்றைப் பயன்படுத்தி ரணில், அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளதாகவும் மஹிந்தானந்த தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் பிழையாக வழிநடத்தி வருவதாகவும் பிரதமர் மீதான நம்பிக்கையின்மையே ஜனாதிபதியின் கூற்று மூலம் வெளிப்பட்டுளளதாகவும், விரைவில் இந்த அரசாங்கம் கவிழ்ந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.