நாகலாந்து மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இடம்பெற்ற மோதலில் ராணுவ வீரர் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட ராணுவத்தினருக்கும் தீவரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது தீவிரவாதிகள் கூட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.