குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிகள் தொடர்பில் திருப்தியில்லாவிட்டால் அரசாங்கத்திற்கோ அல்லது ஜனாதிபதிக்கு அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என பிரிவின் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் ரவி வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மறைமுகமாக இதனைத் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதியின் கருத்து குறித்து நேரடியாக தாம் எதனையும் கூற விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். தாம் ஓர் அரசாங்க ஊழியர் என்ற காரணத்தினால் ஜனாதிபதியின் கருத்துக்கு நேரடியாக பதிலளிக்க முடியாது எனவும் எனினும், நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.