நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனுமதியின்றி சீனியின் விலையை உயர்த்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அமைய வெள்ளைச் சீனி ஓர் அத்தியாவசிய பண்டம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே விலையை உயர்த்த வேண்டுமாயின் அதிகாரசபையிடமிருந்து எழுத்து மூலம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளைச் சீனி இறக்குமதிக்கான வரி கிலோ ஒன்றுக்கு பத்து ரூபா என்ற அடிப்படையில் அண்மையில் உயர்த்தப்பட்டிருந்ததனைத் தொடர்ந்து தேனீரின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனுமதியின்றி சீனியின் விலையை உயர்த்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.