குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ரத்துபஸ்வல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஓர் குற்றச் செயல் என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு சுத்தமான குடிநீர் கோரி வெலிவேரிய ரத்துபஸ்வல பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டதுடன்இ ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவத்தை ஓர் குற்றச் செயலாகவே கருத வேண்டுமென கம்பஹா பிரதம நீதவான் காவிந்தியா நாணயக்கார தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்படைய ஆயுதங்களும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.