முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் வெளியிட்ட கருத்து பிழையானது என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ, பிழையான தகவல்களை வழங்கி மக்களை திசை திருப்பும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி அரசாங்கம் பொருளாதாரத்தை வலுவடையச் செய்துள்ளது என்பதனை மஹிந்த ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் இறுதி நேரம் வரையில் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்ள பல்வேறு வழிகளில் போராடித் தோற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் சமூகமான உறவினைப் பேணி சலுகைத்திட்டத்தை மீளப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த வெற்றியை மலினப்படுத்தும் முயற்சியில் மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.