குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ரஸ்யாவுடனான தொடர்புகள் குறித்து ட்ராம்பிடம் விசாரணை நடத்தப்படவில்லை என அவரது சட்டத்தரணி Jay Sekulowதெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் ரஸ்யா தலையீடு செய்தது என்பது குறித்து அமெரிக்காவில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளில் தற்போதைய ஜனாதிபதி ட்ராம்ப் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எப்.பி.ஐ. பணிப்பாளரை பணி நீக்கியமை தொடர்பில் தமக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவதாக அண்மையில் ட்ராம்ப் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். எனினும், ஜனாதிபதி ட்ராம்ப் மீது விசாரணை நடத்தப்படவில்லை என அவரது சட்டத்தரணி Jay Sekulowதெரிவித்துள்ளார்.